18 என்றாலே பெங்களூருக்கு ராசி தான் ..!! இதனால கண்டிப்பா ஆர்சிபி சென்னையை ஜெயிச்சிரும்!!

Virat Kohli, RCB,IPL2024

சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கும், 18 என்ற எண்ணுக்கும்  ராசி இருப்பதால் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அணி, சென்னை அணியை வெற்றி பெற்று விடும் என ரசிகர்கள் ஸ்வாரஸ்யமான சில விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கடைசியாக 5 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்று பிளே ஆஃப்க்கான வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்கு ஒரே ஒரு போட்டி மட்டும் மீதம் உள்ளது அந்த போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களில் சேசிங் செய்தாலோ பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

சென்னை அணிக்கும் இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டி என்பதால் வெற்றி பெரும் முனைப்பில் இருந்து வருகின்றனர். தற்போது பெங்களூரு அணியின் ரசிகர்கள் நடைபெற போகும் இந்த போட்டிக்கும், 18 என்ற நம்பருக்கும், பெங்களூரு அணிக்கும் ராசி இருப்பதாக சில ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்து வருகின்றனர். அதில் முதலில் இந்த போட்டியானது வருகிற மே 18 ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 18 ஓவர்களுக்குள் சென்னை அணியை மடக்கி ஜெயிக்க வேண்டும் இதிலும் 18 என்ற நம்பர் கவனிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், கடந்த சில 4 ஆண்டுகளில் மே 18-ம் தேதி ஆர்சிபி அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதாவது, மே 18, 2013 ஆண்டில் நடைபெற்ற சென்னை அணியுடனான போட்டியில் பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதை தொடர்ந்து அடுத்த ஆண்டின் மே-18 2014-ம் ஆண்டில் மீண்டும் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அதே போல 2016-ம் ஆண்டு மே 18-ம் தேதி பஞ்சாப் அணியை எதிர்கொண்டு 86 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இறுதியாக கடைசி ஆண்டு 2023-ல் மே-18ம் தேதி நடைபெற்ற ஹைதராபாத் அணியுடனான போட்டியிலும் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்படி இதுவரை பெங்களூரு அணி மே 18 அன்று விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது 5-வது முறையாக இந்த ஆண்டு சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது.

இப்படி பல 18 என்ற நம்பர் பல இடத்தில் கவனிக்கும் வகையில் இருந்தாலும், இது எல்லாவற்றிற்கும் மேலாக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஜெர்ஸி எண் ’18’ தான். அவர் மே-18 அன்று விளையாடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார்.  இப்படி இதை பல ஸ்வாரஸ்யமான விஷயங்களை கோர்த்து இணையத்தில் விராட் கோலியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் வருகிற மே 18 அன்று நடைபெறும் சிஎஸ்கே அணியுடனான போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்வார்களா என்று பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். மேலும், அன்றைய நாளில் (மே 18) பெங்களுருவில் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்