கிரிக்கெட்டில் வெற்றி பெற 2 வழிகள்… வெற்றியின் ரகசியம் குறித்து ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

Hardik Pandya

சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது என்று குஜராத் அணியின் கேப்டன் ஓபன் டாக்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக பங்கேற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு, முதல் ஆண்டே சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். அதேபோன்று இந்தாண்டும் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள குஜராத் அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

குஜராத் அணியில் அந்த அளவு பெரிய வீரர்கள் இல்லையென்றாலும், இருக்கும் வீரர்கள் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். களத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டிய, அமைதியாக, பொறுமையாக, அதாவது தோனியை போன்று செயல்பட்டு வருகிறார்.

ஏற்கனவே தோனிதான் எனக்கு குரு என்று பல இடங்களில் கூறி வரும் பாண்டியா, அதனை நிரூபிக்கும் விதமாக செயல்பட்டு, வெற்றியும் கண்டு வருகிறார். இந்த சமயத்தில், ஜியோ சினிமாவிக்கு பேட்டியளித்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு 2 வழிகள் உள்ளது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், நம்பர் 1, மிகச்சிறப்பு வீரர்களை அணியில் எடுத்து வெற்றி பெறுவது, அதுதான் இந்தியன்ஸ் அணியின் வழி என்றார்.

நம்பர் 2, வீரர்கள் யாராக இருந்தாலும், வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்பட செய்வது, சென்னை அணியின் வழி எனவும் கூறினார். சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மும்பை இந்தியன்ஸ் எனக்கு ஒரு ஸ்பெஷல் டீம், அது எனது முதல் காதல் போல என்றார். இதுபோன்று, சென்னை அணியின் அணுமுறை எனக்கு உந்துதலாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், “மஹி பாய் (எம்எஸ் தோனி) என்னை மிகவும் பாதித்துள்ளார், குறிப்பாக அவரது விளையாட்டு விழிப்புணர்வு” என ராபின் உத்தப்பா உடனான பேட்டியில், வெற்றியின் ரகசியம் பற்றி பகிர்ந்துகொண்டார் குஜராத் அணியின் கேப்டனும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹர்திக் பாண்டியா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்