இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்… இலவசமாக எப்படி பெறுவது?

India Jersey

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனம் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) கடந்த மே மாத இறுதியில் கையெழுத்திட்டுள்ளது. இதனடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் இந்தியா நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

அடிடாஸ் இந்தியா ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய மூன்று வித இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிகளை வெளியிட்டுள்ளது. அடிடாஸ் மற்றும் பிசிசிஐ ஒப்பந்தத்தின் படி விளையாட்டின் அனைத்து கிட்களை உற்பத்தி செய்வதற்கான பிரத்யேக உரிமைகளை அடிடாஸுக்கு வழங்கியது. ஆடவர், மகளிர் மற்றும் இளைஞருக்கான பிசிசிஐயின் அனைத்து போட்டி, பயிற்சி மற்றும் பயணங்களின் போது தேவைப்படும் உடைகளும் அடிடாஸ் வழங்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை இலவசமாக வெல்வதற்கான வாய்ப்பையும் அடிடாஸ் வழங்குகிறது. அதற்கான படிகளை கீழே பார்க்கலாம்.

  • அடிடாஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ http://adidas.co.in/Indian_cricket_team இணையதளத்திற்கு செல்லவும்.
  • கீழே ஸ்க்ரோல் செய்து, ரேஃபிளுக்கான(raffle) இணைப்பான Enter Now எனும் டேப்(Tab) ஐ காண்பீர்கள்.(ரேஃபிள் என்பது நிறுவனத்தால் நடத்தப்படும் ஒருவகையான போட்டி)
  • உங்கள் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி கடவுச்சொல்லை அமைத்து ரேஃபிளில்(raffle) பதிவு செய்ய வேண்டும்.
  • விருப்பங்களில் இந்திய ஜெர்சியை தேர்வு செய்யுங்கள், அவ்வளவுதான் ரேஃபிளில் பங்கேற்று புதிய இந்திய ஜெர்சியை வெல்வதற்கான போட்டியில் நீங்களும் பங்கேற்றுள்ளீர்கள்.

ரேஃபிளில் நீங்கள் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 மற்றும் முடிவுகள் ஜூலை 2 அன்று அறிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்