NRK [Image source : Twitter/@TNPremierLeague]
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய NRK vs SLST போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சேலம் அணி 16 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி நெல்லை அணியின் ஓவர்கள் 20-லிருந்து 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, நெல்லை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஸ்ரீ நெரஞ்சன் நிதானமாக விளையாட, அவருடன் களமிறங்கிய அருண் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். நெரஞ்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அஜிதேஷ் அதிரடியாக விளையாடியும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் சூர்யபிரகாஷ் அபாரமாக விளையாடி அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தார். முடிவில், நெல்லை அணி 15.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக அஜிதேஷ் 39 ரன்களும், சூர்யபிரகாஷ் 33* ரன்களும் எடுத்துள்ளனர். சேலம் அணியில் அபிஷேக் தன்வார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…