ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி இன்று மேல்போன் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ், மத்தேயு வேட் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே பும்ரா வீசிய பந்தில் ஜோ பர்ன்ஸ் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மார்னஸ் லாபுசாக்னே, மத்தேயு வேட் உடன் கூட்டணி அமைத்து அணியின் எணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த மத்தேயு வேட்30 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் நிதானமாக விளையாடி 38 ரன் எடுத்தார்.
சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 48 ரன்கள் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஆஸ்திரேலிய அணி 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டுகளையும் பறித்தனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…