AUS vs AFG [Image Source : X/@iamtanveer09]
AUSvsAFG: ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில், இன்று 38-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக உள்ள 45 லீக் போட்டிகளில் 37 போட்டிகள் முடிந்தநிலையில், 38-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது.
பத்து நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகள் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துள்ளன.
இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த 38-வது போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியா அணி, முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு, மீண்டும் அதிரடியாக விளையாடி தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றது.
இதனால் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இந்த அனைத்து போட்டிகளும் ஆஸ்திரேலியாக்கு சாதகமாகவே அமைந்தது. உலகக் கோப்பையில் இதுவரை 2 ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதை வைத்துப் பார்க்கையில் இன்றையப் போட்டியில், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது போட்டித் தொடங்கிய நிலையில், டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(C), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, இக்ராம் அலிகில்(W), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன்-உல்-ஹக்
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ்(w), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ்(c), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…