பாபா இந்திரஜித் அதிரடி அரைசதம்..! திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

Published by
செந்தில்குமார்

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய DGD vs MADURAI போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய மதுரை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திண்டுக்கல் அணியில் சிவம் சிங் மற்றும் விமல் குமார் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அவர்களையடுத்து களமிறங்கிய அருண் 3 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்பின், பாபா இந்திரஜித் மற்றும் ஆதித்யா கணேஷ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திரஜித் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 78 ரன்களை குவித்தார்.

முடிவில், திண்டுக்கல் அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 78* ரன்களும், ஆதித்யா கணேஷ் 22* ரன்களும் அடித்துள்ளனர். மதுரை அணியில் குர்ஜப்னீத் சிங் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

1 hour ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

2 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

3 hours ago