திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜூவுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் அளித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை (35) 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 12ம் தேதி அன்று நடந்தது, இதில் சிறுமி பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து செல்லும்போது கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, 20 தனிப்படைகள் அமைத்து 13 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் ராஜு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் தனது அடையாளத்தை மாற்றி மாற்றி கூறியதாகவும், 75 சிசிடிவி காட்சிகள் மூலம் அவரைக் கண்டறிந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.