ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

MK Stalin - Fishermen

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 29.07.2025 அன்று இராமநாதபுரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் இது 4-வது கைது நடவடிக்கை எனவும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைதாவது வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதுவரை 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்