திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை (35) 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 12ம் தேதி அன்று நடந்தது, இதில் சிறுமி பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு நடந்து செல்லும்போது கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, 20 தனிப்படைகள் அமைத்து 13 நாட்கள் […]
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பணிவு மற்றும் நாகரிகமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் தனது பேச்சில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? காங்கிரசை விட பாஜக தான் நேருவை அதிகம் நினைவு வைத்திருக்கிறது. […]
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ”பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது. பயங்கரவாத தாக்குதல்களில் மக்கள் மட்டுமல்ல வீரர்களும் மரணம். 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறியதை நம்பி சுற்றுலா பயணிகள் சென்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்ததாக மத்திய அரசு கூறியதை […]
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார். ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்தார். “அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மதத்தைக் கேட்டு கொல்லப்பட்டனர். இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று அவர் தெரிவித்தார். ஆபரேஷன் […]
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்கள் உயிரிழந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத உள்கட்டமைப்புகளை துல்லியமாக தாக்கி அழித்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் நேற்று (ஜூலை 28) 16 மணி நேர விவாதம் […]
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் மூலம் உடனடியாக பதிலடி கொடுத்தது குறித்து ராஜ்நாத் சிங் மக்களவையில் விரிவாகப் பேசினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் மக்களவையில் ஆபரேஷன் சிந்துர் குறித்த விவாதத்தைத் தொடங்கிவைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”இந்திய ராணுவப் படைகள் நம் எல்லையை மட்டுமல்ல, நம் நாட்டின் […]
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் விவாதம் நடைபெறவுள்ளது. இப்பொது, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது என்ன நடந்தது என்பது குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,, ”பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மே 6 […]
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில் “அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்லிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக கடவுள் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 […]
டெல்லி : ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சட்டமசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். ஏற்கனவே, இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பே முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி எம்பி சிவா, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இப்படி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் மசோதாவும் இன்று […]
டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களையும் ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதற்கு திட்டமிட்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னதாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை கொண்டு […]
சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனென்றால், மத்திய அரசு நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு […]
சென்னை : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் இந்த […]
டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, ஒரே நாடு ஒரே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கையாக குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்தது. இதன் அடுத்தகட்ட நகர்வாக ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டமசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் […]
டெல்லி : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது. புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஃபெஞ்சல் புயலால் அந்தந்த மாவட்டங்களில் வெகு வருடங்கள் கழித்து பேய் மழை பெய்துள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி மழைநீர் வெள்ளமாக ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் அளிக்க […]
டெல்லி: திமுக எம்பி தயாநிதி மாறன் இன்று நாடளுமன்றத்தில் விமான டிக்கெட் உயர்வு குறித்து மக்களவையில் கோரிக்கை முன்வைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 23இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்தார். அதற்கடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார்கள். இன்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், […]
டெல்லி : 18வது மக்களவை முதல் கூட்டத்தொடரில் நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்பிக்கள் 40 பேரும் தற்போது அடுத்தடுத்து பதவி ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டு வருகின்றனர். மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவி ஏற்றுக்கொண்ட பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டார். அடுத்து தமிழச்சி தங்கபாண்டியன், […]
கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு […]
நாடளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. ஏற்கனனவே மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையை பிரதமர் மோடி நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து இன்று 7வது நாள் கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராடியதை […]
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவையில் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் காலணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் புகையை மக்களவைக்குள் தெளித்தனர். அவர்களை மக்களவை உறுப்பினர்கள் பிடித்து, பின்னர் பாதுகாவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.! இந்த பாதுகாப்பு […]
தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்ற உயர் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. ஆனால் அதனை மறுத்து, மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. புதிய சட்டதிருத்தத்தின் படி, தேர்தல் உயர் அதிகாரிகளை நியமிக்கும் குழுவில், பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் உடன் இந்திய தலைமை நீதிபதிக்கு பதில் மத்திய அமைச்சர் […]