பஞ்சாபை வீழ்த்தி 3-வதாக அணியாக பிளே ஆப் சென்ற பெங்களூர் ..!

Published by
murugan

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இப்போட்டியானது, ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய கோலி 25, படிக்கல் 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் இறங்கிய மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ஏபி டிவில்லியர்ஸ் 23, மேக்ஸ்வெல் 57 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் ஷமி, மோயிஸ் ஹென்ரிக்ஸ் தலா 3 விக்கெட்டை பறித்தனர். 165 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர்.

நிதானமாக வந்த கே.எல் ராகுல் 39 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.  அடுத்து களமிறங்கிய நிக்கலஸ் பூரன் வழக்கம் போல சிறப்பாக விளையாடாமல் 3 ரன் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் அரைசதம் விளாசி 57 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 20 ரன் எடுக்க பின்னர் களம் கண்ட சர்பராஸ் கான் டக் அவுட்டானார்.

இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால், பெங்களூர் அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 16 புள்ளிகள் எடுத்து  3-வதாக அணியாக பிளே ஆப் பெங்களூர் சென்றது. இதற்கு முன் சென்னை அணி 18புள்ளி உடன் முதல் அணியாக பிளே ஆப் சென்றது.

இதைத் தொடர்ந்து ,டெல்லி அணி 18 புள்ளிகள் பெற்று இரண்டாவது அணியாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

2 hours ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

2 hours ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

2 hours ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

3 hours ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

4 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

4 hours ago