10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி.!

Published by
murugan

ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

 டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஃபின்ச் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்தார்.

 இதைதொடர்ந்து, இறங்கிய விராட் கோலி சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 51 ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.

164 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே 6 ரன்னில் டேவிட் வார்னர் வெளியேறினார். பின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி இணைந்து அணியை சரிவில் இருந்து மீண்டு கொண்டு வந்தனர்.

சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே 34 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து, அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 61 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஹைதராபாத் அணி 19.4  ஓவர் முடிவில்  அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோல்வியை தழுவியது.

பெங்களூர் அணியில் சாஹல் 3 , சிவம் துபே மற்றும்  நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

Published by
murugan

Recent Posts

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

22 minutes ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

2 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

2 hours ago

த.வெ.க தலைவர் விஜய் பிறந்த நாள் : பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை வாழ்த்து!

சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…

3 hours ago

“போரில் நாங்களும் இணைந்துவிட்டோம்”…ஏமன் ராணுவம் அறிவிப்பு!

சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…

4 hours ago

அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி தாக்குதல் எப்படி? டிரம்பிடம் எழுந்த கேள்வி!

வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…

4 hours ago