சிபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது,
இந்த வருடம் சிபிஎல் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது .33 ஆட்டங்களாக டிரினிடாடில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளன. சிபிஎல் இறுதி போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் போன்ற 168 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது என்று போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறியுள்ளார்.
இந்த சிபிஎல் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள் அதன் பிறகு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் எடுக்கப்படும், அதில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால் வேறொரு இடத்திற்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலில் சொந்தக் காரணங்களுக்காக கிறிஸ் கெயில் விலகுவதாக கூறியுள்ளார். மேலும் டிகேஆர் அணி இந்த வருட சிபிஎல் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் 48 வயதான பிரவீன் டாம்பே தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…