இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 81 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும்.
சென்னை அணியில் கலீல் அகமது 3 விக்கெட்டும், நூர் அகமது, பத்திரனா தலா 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் பறித்தனர். 183 ரன்கள் இலக்குடன் சென்னை அணியில் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலே ரச்சின் ரவீந்திரா ரன் அடிக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
பின்னர் ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி இருவரும் நிதானமாக விளையாடி சற்று அணியின் எண்ணிக்கையை சேர்த்தனர். இருப்பினும் ராகுல் திரிபாதி 23 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சிவம் துபே வந்த வேகத்தில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டர் என மொத்தம் 18 ரன்கள் எடுத்து நடையை கட்டினார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் வந்த வேகத்தில் 9 ரன்கள் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் சென்னையை நீ விக்கெட் பறிகொடுத்து வந்தாலும் மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி தனது அரை சாதத்தை பூர்த்தி செய்து 63 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய , தோனி 16 ரன்களும், ஜடேஜா 32* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டையும், ஆர்ச்சர், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் அடைந்துள்ளது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் 2 போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் அடைந்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…