மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக டுப்ளெஸ்ஸி, ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.
சென்னை அணியில் டுப்ளெஸ்ஸி மெயின் அலி ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு காயம் காரணமாக வெளியேற பின்னர் களமிறங்கிய ரெய்னா வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்த சென்னை அணி விக்கெட்டுகளை இழக்க, ருதுராஜ் மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடி சென்னை அணியை மீட்டெடுத்தனர்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை அடித்தனர். அதிகபட்சமாக ருதுராஜ் 58 பந்துகளில் 88* ரன்களை அடித்து, இறுதி வரை களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணிக்கு 157 ரன்களை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, பும்ரா தலா 2 விக்கெட்டுகளை பறித்தனர்.
மும்பை அணியில் தொடக்க வீரராக குயின்டன் டி காக், அன்மோல்பிரீத் சிங் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த குவின்டன் டி காக் 17 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய சூரியகுமார் 3, இஷான் கிஷன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கீரான் பொல்லார்ட் 15 ரன்களில் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தார்.
அடுத்து களமிறங்கிய க்ருனால் பாண்டியா4 ரன்களில் வெளியேற மத்தியில் இறங்கிய மட்டுமே ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணியில் பிராவோ 3, தீபக் சாஹர் 2, ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
இப்போட்டியில் சென்னை வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…