Ruturaj Gaikwad Wedding [FileImage]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நேற்று உத்ராக்ஷாவை திருமணம் செய்து கொண்டார்.
CSK தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அவருடைய நீண்டநாள் காதலியான உத்ராக்ஷாவினை நேற்று மாலை திருமணம் செய்து கொண்டார். அதனை உறுதி செய்யும் வகையில், தனது திருமண நிகழ்வின் கியூட் புகைப்படங்களை ருதுராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ருதுராஜ் மணந்துகொண்டு உத்ராக்ஷாவும் மகாராஷ்டிரா மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர். இதற்கிடையில், ருத்துராஜ் உலகக் கோப்பை டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தேர்வாகியிருந்தாலும் திருமணம் காரணமாக நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாள் டேட்டிங்:
ருதுராஜ் கெய்க்வாட் நீண்ட நாட்களாக உத்கர்ஷாவுடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் நேற்று அவரை திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி, உத்கர்ஷா ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க வந்து, ருத்துராஜ் கெய்க்வாட்டை உற்சாகப்படுத்துவது வழக்கம். நடந்து முடிந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியிலும், உத்கர்ஷா போட்டியைக் காண வந்திருந்தார். ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் CSK அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பின், ருதுராஜ் உடன் கோப்பையை வைத்திருக்கும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இந்த ஜோடிக்கு திருமண புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொன்டு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். ஷிகர் தவான், மகிஷ் தீக்ஷனா, தேவ்தத் படிக்கல், விஜய் சங்கர், ரஜத் படிதார், ரவி பிஷ்னோய், ராகுல் சாஹர், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ரஷித் கான், கலீல் அகமது, ராகுல் தெவாடியா, தீபக் சாஹர் உள்ளிட்ட பல வாழ்த்துக்களை தெரிவித்துள்னர்.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…