[Image Source : Twitter/@sportstarweb]
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பாண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முதல் பாதி முடிந்து, இரண்டாவது பாதி தொடங்கி பல்வேறு சுவாரஸ்யங்களுடன் நடைபெற்று வருகிறது. அதுவும், இந்த வாரம் rivalry வாரமாக அமைந்துள்ளது. இதில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோதுகின்றன.
அதாவது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. தற்போது மும்பை அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையை எதிர்கொள்கிறது. இன்று சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பிற்பகல் போட்டியில் சென்னை – மும்பை பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், எல்-கிளாசிகோ எனும் மிகவும் பரபரப்பான போட்டியாகக் கருதப்படும் சென்னை மற்றும் மும்பை போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் டாஸுடன் தொடங்கியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நெஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் சப்ஸ்: அம்பதி ராயுடு, மிட்செல் சான்ட்னர், சுப்ரான்ஷு சேனாபதி, ஷேக் ரஷீத், ஆகாஷ் சிங்.
மும்பை இந்தியன்ஸ் சப்ஸ்: குமார் கார்த்திகேயா, ராமன்தீப் சிங், டெவால்ட் ப்ரீவிஸ், ராகவ் கோயல், விஷ்ணு வினோத்.
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…