ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காசு கொடுத்தும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் ஷிகர் தவான், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ரூ.20 லட்சம் நிதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நாம் இப்போது இக்கட்டமான சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வது, காலத்தின் தேவையாக உள்ளது. நீங்கள் இத்தனை நாட்களாக எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும் நான் நாட்டு மக்களுக்காக கொடுக்கவுள்ளேன்”
அந்தவகையில், இந்தியாவின் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில், ரூ. 20 லட்சமும், இனி நடைபெறவுள்ள போட்டிகளில் எனக்கு கிடைக்கும் பரிசு தொகையையும் மிஷன் ஆக்ஸிஜனுக்கு கொடுக்கவுள்ளேன். கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு ஈடுபடும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்கள் செய்யும் பணிக்கு நாங்கள் கடன்பட்டுள்ளோம். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். ஒன்றுபடுவோம், வெல்வோம்” என்று தெரித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…