தினேஷ் கார்த்திக் நேற்று நடந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை நேற்று பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். இதில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 95* ருதுராஜ் 64 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டி கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 200வது ஐபிஎல் போட்டி. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னர் 200 ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா ஆகிய இருவர் மட்டுமே கடந்திருக்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் நேற்று நடந்த போட்டியில் விளையாடியதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நேற்று நடந்த இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…