ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 44-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி போட்டி என்பதால் பாகிஸ்தான் தங்களால் முடிந்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்ய உள்ளது.
நியூசிலாந்து அணி தற்போது 0.743 என்ற நிகர ரன் ரேட்டுடன் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 0.036 மற்றும் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்டும் தேவைப்படுகிறது. நியூசிலாந்தை விட அதிக ரன் ரேட் பெற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை அடித்து இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்திற்கு முன்கூட்டியே வீழ்த்த வேண்டும்.
அப்படி இல்லையென்றால் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை 2.4 ஓவர்களில் அதாவது 16 பந்துகளில் அடைய வேண்டும். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தால் அரையிறுதி போட்டிக்கு செல்வதற்கு கொஞ்சம் வாய்ப்பு இருந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள்:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…