அடுத்த IPL -லில் தொடரிலும் விளையாடுவேன் என சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்திள்ளார்.
ஐபிஎல் நடப்பு சீசனில் இருந்து தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என தகவல் வெளியானது. காரணம் ஐபிஎல்லில் கடந்த சீசன் மற்றும் நடப்பு சீசனில் தோனி சரியாக பேட்டிங் செய்யாமல் இருந்து வருகிறார். தோனி கடைசியாக டெல்லி அணியுடன் விளையாடும்போது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல விளையாடியதாக பலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.
ஆனால், அதேநேரத்தில் தோனி பேட்டிங்கில் சொதப்பினாலும், அவர் எடுக்கக்கூடிய முடிவுகள், கேப்டன் பதவியை சிறப்பாக செய்து வருவதால் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில், நேற்று இந்தியா சிமெண்ட்ஸ் இன் 75-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் மூலம் சென்னை ரசிகர்களுடன் தோனி பேசினார். அப்போது, ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் விளையாடுவீர்களா..? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தோனி ஐபிஎல்லில் கடைசி போட்டி என்பது சென்னை ரசிகர்கள் முன்னிலையில் தான் இருக்கும் எனவும் சென்னையில் விளையாடுவதுதான் கடைசி போட்டியாக இருக்கும் என தெரிவித்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதை மனதில் வைத்துதான் தோனி இவ்வாறு கூறினார். இதனால், அடுத்த சீசனில் சென்னை அணிக்கு தோனி இருப்பார் என்பது உறுதியாகி விட்டது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடி வருகிறார். ஒரு வேளை தோனி ஓய்வு அறிவித்தால் அந்த இடத்துக்கு யார் வருவார்கள் என்ற சந்தேகம் சென்னை ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…