இன்று ஆரம்பமாகவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் நாள் டெஸ்ட் போட்டியில்,இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.இதனைத் தொடர்ந்து,5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில்,இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் நாள் டெஸ்ட் தொடர் இந்திய நேரப்படி,சற்று நேரத்தில் மாலை 3.30 மணிக்கு நாட்டிங்ஹாமில் நடைபெறவுள்ளது.அதன்படி,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.இதற்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணி( XI): ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்
இங்கிலாந்து அணி (XI): ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (wk), சாம் கர்ரன், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…