முக்கியச் செய்திகள்

146 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் .. கடுப்பான ஏஞ்சலோ மேத்யூஸ்..!

Published by
murugan

வங்கதேசம்-இலங்கை போட்டியின் போது ​​146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத ஒன்று நடந்தது. இந்த போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு பந்து கூட விளையாடாமல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த பேட்ஸ்மேனும் இப்படி அவுட் ஆகி பெவிலியன் திரும்பி சென்றது இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இலங்கை வீரர் சதீர சமரவிக்ரம அவுட் ஆன பிறகு, ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். ஆனால் ஏஞ்சலோ மேத்யூஸின் ஹெல்மெட் சரியாக இல்லை, அந்த ஹெல்மெட் அணிவதற்கு சிரமப்பட்டார். அப்போது ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றொரு ஹேம்லெட்டை பெவிலியனில் இருந்து கொண்டு வர சைகை காட்டினார். ஆனால் டெல்மெட் எடுத்து வர நேரம் ஆன நிலையில் ​​பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், மேத்யூஸுக்கு எதிராக கால அவகாசம் கோரி முறையிட்டார். ஷாகிப் அல் ஹசனின் முறையீட்டிற்குப் பிறகு நடுவர் மேத்யூஸை அவுட் செய்து அவரை திரும்பிச் செல்லும்படி கூறினார்.

ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது:

இதன் பின்னர் நடுவரும் மேத்யூஸும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இறுதியில் இலங்கை வீரர் மேத்யூஸ் பெவிலியன் திரும்பி சென்றார். ஐசிசி விதி 40.1.1 இன் படி, விக்கெட் வீழ்ந்த பிறகு அல்லது பேட்ஸ்மேன் ஓய்வு பெற்ற பிறகு அடுத்து வரும் பேட்ஸ்மேன் 3 நிமிடங்களில் விளையாட தயாராக இருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்றால் எதிர் அணி வீரர்கள் கால அவகாசம் கேட்டு மேல்முறையீடு செய்யலாம். இந்த விதி படி தான் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் செய்யப்பட்டார். இன்று நடந்த சம்பவம் ​​146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில்  முதல் முறையாக நடந்துள்ளது.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச முடிவு செய்தார். இதைதொடந்து களமிறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 279 ரன்கள் எடுத்துள்ளது.

Published by
murugan

Recent Posts

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

1 hour ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

2 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

2 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

3 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

4 hours ago