henry olonga Heath Streak [File Image]
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார் எனவும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துவிட்டதாகவும், தீயாக ஒரு செய்தி பரவி வந்தது. இந்த நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் இறந்துவிட்டதாக பரவி வரும் செய்தி வதந்தி எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், முன்னாள் ஜிம்பாப்வே வீரரும் ஹீத்தின் நண்பருமான ஹென்றி ஒலோங்கா தனது ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் உடன் ஹென்றி ஒலோங்கா வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடலை எடுத்து ஹென்றி ஒலோங்கா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளார். அந்த உரையாடலின் போது ஹீத் ஸ்ட்ரீக் ‘நான் நலமாக இருக்கிறேன் பரவி வரும் இந்த (வதந்தி) ரன்அவுட்டை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்” என கூறியுள்ளார்.
அந்த உரையாடலை பகிர்ந்து ஹென்றி ஒலோங்கா ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்த செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ” ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி தகவல். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் தான் இருக்கிறார் தற்போது பரவி வருவது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…