Sanju Samson [Image source : file image ]
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து. அடுத்ததாக 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ் தான் அணி வெற்றிபெற முக்கிய காரணம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் தான். குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்களை குவித்தார். 13 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனையும் படைத்தார்.
ஆனால், அவரால் சதம் மட்டும் அடிக்க முடியவில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 13வது ஓவரில் ஒரு பந்து மீதமிருந்தது. அந்த நேரத்தில் சாம்சன் 28 பந்தில் 48 ரன்களில் இருந்தார், பந்து வீச்சாளர் சுயாஷ் பந்தை லெக் சைடில் வைடு திசையில் பந்து வீச முயற்சித்தார்.
அந்த பந்தை சாம்சன் தனது முன் காலை முழுவதுமாக நகர்த்தி வைடு சென்ற பந்தை தடுத்தார். அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்த்து போட்டியை முடிக்க ஒரு சிக்ஸர் அடித்து சதம் அடிக்குமாறு சாம்சன் சைகை காட்டினார். அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன்கள் மட்டுமே அடித்ததால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் சஞ்சு சாம்சனை பாராட்டி வருகிறார்கள்.
மேலும், இதைப்போல 2014 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் விராட் கோலிக்காக ஒருமுறை தோனி செய்ததையும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…