PBKSvSRH [file image]
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர்.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 64 ரன்களும், அப்துல் சமது 25 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல், சாம் கரன் தலா 2 விக்கெட்டையும், ரபாடா 1 விக்கெட்டை பறித்தனர். 183 ரன்கள் இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.
2-வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 14 ரன் எடுத்து வெளியேற அடுத்துகளமிறங்கிய சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 28, ஜிதேஷ் சர்மா 19 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 46* , அசுதோஷ் சர்மா 33*ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ், நடராஜன், நிதிஷ் ரெட்டி, ஜெய்தேவ் உனட்கட் 1 விக்கெட்டையும் பறித்தனர்.
இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் ஹைதராபாத் அணி 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…