ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகன் விருதை ஹர்திக் பாண்டியா தட்டிச்சென்றார்.
இன்று சிட்னியில் நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஒவரில் 194 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில், 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இதனைத்தொடர்ந்து, ஆட்டநாயகன் விருது ஹர்திக் பாண்டியாக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், நான் ஸ்கோர்போர்டைப் பார்த்து விளையாட விரும்புகிறேன். இதனால் எந்த பந்து வீச்சாளர்களை குறிவைப்பது என்று எனக்குத் தெரியும்.
நான் இந்த சூழ்நிலைகளில் பலமுறை இருந்திருக்கிறேன். கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டேன். எனது விளையாட்டு எப்போதுமே நான் சுமக்கும் நம்பிக்கையைச் சுற்றியே இருக்கிறது. நாங்க பெரிய ரன்களை சேஸ் செய்யும் போது நேரங்களை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். டி20-களில் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் இருக்கிறது.
எங்களுக்கு 30 பந்துகளில் 70-80 தேவைப்பட்டால், நான் அதை 12 பந்துகளாக நினைத்து இறுதி முடிவை விட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறேன். ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். நடராஜனும் சிறப்பாக செயல்பட்டார். அவர் ஆட்ட நாயகனாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், நடராஜனை தவிர மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இந்த போட்டி சாதகமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…