நேற்று முன்தினம் இந்திய , ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே மயங்க் அகர்வால் வெளியேற இதையடுத்து களமிறங்கிய புஜாரா 17 ரன்னில் வெளியேறினார். பின்னர் ரஹானே, சுப்மான் கில் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த சுப்மான் கில் 45 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் அடுத்து இறங்கிய ஹனுமா விஹாரி 21, ரிஷாப் பண்ட் 29 ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதையெடுத்து, ரஹானே, ஜடேஜா சிறப்பாக விளையாடி வந்தனர். அதிரடியாக விளையாடி வந்த ரஹானே சதமும், ஜடேஜா அரைசதமும் விளாசினார்.
இதையடுத்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக இந்திய அணி 115.1ஓவரில் 326 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவை விட 131 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கி 23 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளனர்.
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…