ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 194 ரன்கள் அடித்தது. 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – தவான் களமிறங்கினார்கள். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த கே.எல்.ராகுல் 30 ரன்களில் வெளியேற, பின்னர் கோலி களமிறங்கினார்.
கோலி – தவான் கூட்டணியில் இந்திய அணியின் ஸ்கொர் உயர, அரைசதம் விளாசிய தவான் 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப, 40 ரன்கள் அடித்து கோலி தனது விக்கெட்டை இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் – ஹர்திக் பாண்டியா கூட்டணி களமிறங்கியது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட, 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதுமட்டுமின்றி, டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…