சொந்தமண்ணில் பழிக்கு பழி … இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா..!

Published by
murugan

நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும்  மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து முதலில் இறங்கியது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா,சுப்மன் கில் இருவரும்  களமிறங்கினர்.

போட்டி தொடங்கியது முதல் ஒரு புறம் சுப்மன் கில் நிதானமாக விளையாட மறுபுறம் ரோஹித் ஷர்மா அதிரடி விளையாட அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 47 ரன்னில்  ஆட்டமிழந்தார்.  பின்னர் விராட் கோலி களமிறங்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 79* ரன்கள் எடுத்து திடீரென காலில் ஏற்பட்ட வலி காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

இதைத்தொடர்ந்து கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். இவர்களின் விக்கெட்டை பறிக்கமுடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய விராட் கோலி தனது 50-ஆவது ஒருநாள் சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். அடுத்த சில நிமிடங்களில் விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபுறம் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி தொடர்ந்து  67 பந்துகளில் சதத்தை அடித்து 105 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 1 எடுக்க , கே.எல்.ராகுல் 39* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக  இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணி 398 ரன்கள் என்ற  வெற்றி இலக்குடன் தொடக்க வீரர்களாக டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரன் இருவரும் களமிறங்கினர்.

இருவரும் ஆட்டம் தொடங்கிது முதல் நிதானமாக விளையாடி வந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர் ஷமி வீசிய முதல் பந்தலையே டெவான் கான்வே 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்க அடுத்து இரண்டு ஓவர் பிறகு மீண்டும் ஷமி பந்து வீச களத்தில் இருந்த ரச்சின் ரவீந்திரன் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 39 ரன்னில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் டேரில் மிட்செல் , கேன் வில்லியம்சன் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். இருப்பினும் நிதானமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இந்திய அணி சற்று திணறி வந்தது. இதில் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் சதம் விளாசினார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் சூரியகுமார் யாதவரிடம் கேட்ச் கொடுத்து 69 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.  அடுத்து வந்த டாம் லாதம் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.  அடுத்துவந்த மார்க் சாப்மேன் 2 ரன்னில் வெளியேற களத்தில் அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 119 ரன்னில் 7 சிக்ஸர் , 9 பவுண்டரி என மொத்தம் 134 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 327 ரன்கள் எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக சென்றுள்ளது.

இந்திய அணியில் முகமது ஷமி 7 விக்கெட்டையும், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டை பறித்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. அந்த போட்டியில் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் விதமாக இன்று நடந்த  முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

2 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago