“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

நேற்று பிறந்தவன், நேற்று கட்சி தொடங்கியவன் அடுத்த முதலமைச்சர் என்று பேசக்கூடிய நிலை உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார்.

MK stalin

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 3,000 மாற்றுக்கட்சியினர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வில் பேசிய முதல்வர், ”வெற்றிகரமாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். ஏற்கனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் எல்லாம் மக்களிடையே நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது.

இன்னும் ஓராண்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றப்போகிறோம் என்பதை கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். 5 ஆண்டுகளை நிறைவு செய்து, வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றிபெற்று திமுக 7-வது முறையாக ஆட்சியமைக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான்அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.. நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர்.. அரசியலுக்கு அரிச்சுவடே தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர்.. என்று பேசக்கூடிய நிலைதான் உள்ளது. நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லை என்றும் நம்பிக்கை அளித்துள்ளார். மேலும், இவ்வாறு முதல்வர் கூறியது, விஜயை மு.க ஸ்டாலின் மறைமுகமாக தாக்கியுள்ளார் என்று கிசுகிசுக்க தொடங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்