MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

ஜராத் அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயம் செய்துள்ளது. அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

MI vs GT

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

ராக்ல்டன் 2 ரன்கள் எடுத்த பிறகும், ரோஹித் 7 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜாக்ஸ் இணைந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவருக்கும் இடையே 71 ரன்கள் கூட்டு சேர்ந்தது. இதன் பிறகு சூர்யகுமார் யாதவ் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மும்பை அணி 11.4 ஓவர்களில் 100 ரன்கள் தாண்டிய போது, நான்காவது விக்கெட்டையும் இழந்தது. நிதானமாக விளையாடி கொண்டிருந்த வில் ஜாக்ஸ் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இப்போது திலக் வர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் களத்தில் உள்ளனர்.

இதையடுத்து, உடனே அடுத்த விக்கெட் விழுந்தது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மூன்று பந்துகளில் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை சாய் கிஷோர் பெவிலியனுக்கு அனுப்பினார். 13.5 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்திருந்தபோது மும்பை அணி ஆறாவது விக்கெட்டை இழந்தது. திலக் வர்மா ஏழு பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். அவரை ஜெரால்ட் கோட்ஸி பெவிலியனுக்கு அனுப்பினார்.

இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. இறுதியில் குஜராத் டைட்டன்ஸின் மிரட்டல் பந்துவீச்சில் தடுமாறிய மும்பை அணி, 14 ஓவர்கள் முடிவில் 114 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. கடைசியில் மும்பை அணி சார்பாக களமிறங்கிய கார்பின் போஷ் சற்று அதிரடி காட்டி, 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

இப்பொது 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்க போகிறது. குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்