INDvAUS [Image source : X/@BCCI]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20ஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வென்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதன்படி முதலில் களமிறங்கிய ருத்ராஜ் மற்றும் சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடியது. ஒரு பக்கம் கில் அதிரடியாக விளையாட, மற்றோரு பக்கம் ருத்ராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி இருவருமே சதம் அடித்தனர்.
சுப்மன் கில் 104 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்தனர். ஷ்ரேயாஸ் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து சில நிமிடங்களில் சுப்மன் கில்லும் வெளியேறினார். பின் கே.எல் ராகுல், இஷான் கிஷன் இணைந்து நன்றாக விளையாடினார்கள். இதில் கே.எல்.ராகுல் 52 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷனும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு சூர்யகுமார் யாதவ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 72* ரன்களும், ஜடேஜா 13* ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இதில் மேத்யூ மற்றும் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, மேத்யூ 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார். பிறகு வார்னர் ஆட்டமிழக்க லபக்சன் களமிறங்கி 27 ரன்கள் எடுத்தார்.
இவரையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் சீன் அபோட் 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில் போட்டிக்கு நடுவே மழையானது குறுக்கிட்ட நிலையில் ஆட்டம் தடைபட்டது. இதனால் டிஎல்எஸ் முறையானது கடைபிடிக்கப்பட்டு ஆட்டத்தின் ஓவர்கள் ஆனது 33 ஆக குறைக்கப்பட்டு இலக்கு 317 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கு குறைக்கப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். இதனால் 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பந்துவீச்சை பொறுத்தவரையில், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…