50மில்லியன்…அன்புக்கு நன்றிகள்..நன்றியுள்ளவனாக உணர்கிறேன்..!விராட் உருக்கம்

Published by
kavitha

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள விராட் கோலி தன் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி தெரித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் மற்றும் ரன் பிரியர் ,ரன் மெஷின் என்று வர்ணிக்கப்படும் விராட் கோலி இந்த வர்ணனயை நிருபிக்க தவறியதில்லை மாறாக அடுத்ததடுத்த சாதனை படைப்பதில் அதிரடி காண்பித்து கிரிக்கெட் ரசிகர்கள் ரசிக்கப்படுபவர்.

இன்ஸ்டாகிராமில் 50 ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்தியர் மட்டுமல்லாமல் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் அதிக ஃபாலோவர்களை கொண்டவர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் விராட்.அவர் இதுவரை 932 இன்ஸ்டாகிராம் பதிவுகள், இரண்டு ஐஜிடிவி வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் 148 பேரைப் அவர் பின்தொடர்கிறார்.

இந்நிலையில் உலகளாவிய பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான Duff and Phelps நடத்தி ஆய்வின் படி, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பிராண்ட் மதிப்பீட்டு பட்டியலில் 31 வயதான கோலியே இன்ஸ்டாகிராமில் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் கோலிக்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை  நடிகை பிரியங்கா சோப்ரா பெற்றுள்ளார். அதே போல் சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராமில் மிக அதிக ஃபாலோயர்களை பெற்று, முதல் இடத்தில் இருப்பவர் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை குவித்துள்ள விராட் கோலி தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி கூறி உள்ளார். அதில் கோலி கூறியதாவது: என்னை பலரும் நேசிக்கிறார்கள், ஆதரவு தருகிறார்கள். நான் என்ன செய்தாலும் என்னை பாராட்டுகிறார்கள் என்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியாக உள்ளது. கடவுள் மிகவும் அன்பானவர். நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன் என்று கோலி  உருக்கத்தோடு கூறியுள்ளார்.

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

3 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

3 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

5 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

5 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

6 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

7 hours ago