#IPL BREAKING: பெங்களூருவை பந்தாடிய மும்பை அணி..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RCB போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி, பெங்களூரு அணியில் முதலில் களமிறங்கிய விராட் கோலி ஒற்றை இழக்க ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், டு பிளெசிஸ் (65 ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல் (68 ரன்கள்) அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு அரைசதம் அடித்தனர். முடிவில், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து, 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் மும்பை அணியில் இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்க, ரோஹித் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதன்பின், களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா ஜோடி அதிரடியாக விளையாடி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டி அணியை வெற்றி பெற செய்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களும், நேஹால் வதேரா 46 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும் குவித்துள்ளனர். பெங்களூரு அணியில் வனிந்து ஹசரங்கா, விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.