Bumrah [File Image]
ஜஸ்பிரித் பும்ரா கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்காலிகமாக கிரிக்கெட்டை விட்டு விலகி இருந்த நிலையில், அவர் நீண்ட மாதங்களுக்கு பிறகு இன்று நடைபெறவுள்ள அயலர்ந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
அயர்லாந்திற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று முதல் வரும் 23-ஆம் தேதி வரை 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்திய அணியில் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படவுள்ளார். பந்துவீச்சாளராக மட்டுமின்றி கேப்டனாகவும் அணிக்கு அவர் திரும்பியுள்ள காரணத்தால் அவருடைய விளையாட்டின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஜஸ்பிரித் பும்ரா இன்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சில சாதனைகளையும் படைக்கஉள்ளார். அது என்ன சாதனை என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
இன்று அயலர்ந்து அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா டி20 சர்வதேசப் போட்டியில் பந்துவீச்சாளராக கேப்டனாக பொறுப்பேற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்பு டி20 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றவர்கள் ஆல்ரவுண்டர் அல்லது பேட்ஸ்மேன் ஆக இருந்திருப்பார்கள்.
ஆனால், பந்துவீச்சாளராக மட்டும் ஒரு வீரர் டி20 போட்டியில் கேப்டனாக பொறுப்பேற்கப்போவது இது தான் முதல் முறை. மேலும், டி20 போட்டிகளில் வீரேந்திர சேவாக், எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரஹானே ஆகியோர் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அதைப்போலவே, விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ரிஷப் பந்த், கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருந்துள்ளனர். தற்போது டி20 போட்டிக்களில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
மற்றோரு சாதனை என்னவென்றால், டெத் ஓவர் அதாவது (16 முதல் 20) ஓவர்கள் வரை டி20 போட்டிகளில் பந்து வீசி இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா 35 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 36 விக்கெட்கள் எடுத்து இந்த பட்டியலில் புவனேஷ்வர் குமார் 36 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
எனவே, இன்று அயலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் 1 விக்கெட் எடுத்தால் புவனேஷ்வர் குமார் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன் செய்துவிடுவார். 2 விக்கெட் எடுத்தால் ஜஸ்பிரித் பும்ரா புவனேஷ்வர் குமார் சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துவிடுவார். எனவே, இன்று நடைபெறும் போட்டியில் இந்த சாதனையை அவர் படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…