இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் விளாசியுள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரின் பார்ட்னர்ஷிப் மூலம் 50 ரன்களை எடுத்து 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், லாரண்ஸ் களமிறங்க வந்த வேகத்தில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து, களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட் 164 பந்தில் சதம் விளாசினார். அதில், 12 பவுண்டரி அடங்கும். மறுபுறம் ஜோ ரூட்டிற்கு தூணாக நிதானமாக விளையாடி வரும் டொமினிக் சிப்லே 250 பந்தில் 83* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். டொமினிக் சிப்லே 12 பவுண்டரி அடித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. டொமினிக் சிப்லே 83* ரன்களும், ஜோ ரூட் 100* ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…