sanjay bangar about virat [file image]
ஆசியகோப்பை 2023 : நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களே ஒட்டுமொத்தமாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விராட் கோலி அருமையாக எதிர்கொண்டு விளையாடுவார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் பார்ம்
இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கர் ” விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நன்றாக விளையாடி இருக்கிறார். இதற்கு முன்பாக கடைசியாக விளையாடிய போது, விராட் ஒரு சிறப்பான இன்னிங்ஸுடன் வெளியேறினார். 60 ரன்கள் அடித்தார் அந்த போட்டியில் அவருடைய பேட்டிங்கை நீங்கள் பார்த்தால் தனியாக தெரியும். அதைபோலவே நாளை நடைபெறும் போட்டியிலும் அருமையாக விளையாட அவர் தயாராக இருக்கிறார்” எனவும் கூறியுள்ளார்.
ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக அதிரடி தான்
மேலும் தொடர்ந்து பேசிய சஞ்சய் பங்கர் ” பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு எதிராக விராட் கோலி அதிரடியாக விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான கோலியின் பேட்டிங்கை நீங்கள் பார்த்தால் ஷாஹீன் ஷா அப்ரிடி போன்ற சுழற் பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொள்ளும்போது கால்களை பின் நோக்கி நகர்த்தி நேரம் கொடுத்து குறிவைத்து பந்தை அடிப்பார்” என சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்
பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் விராட் கோலி நல்ல பார்மில் இருப்பதால் கண்டிப்பாக சிக்ஸர் பவுண்டரி அடித்து தன்னுடைய அசத்தலான விளையாட்டை வெளிக்காட்டுவார் என நான் மிகவும் ஆவலுடன் அவருடைய பேட்டிங்கை பார்ப்பதற்கு காத்திருக்கிறேன். அவருக்கு ஏரளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர். அவருடைய பேட்டிங் மிகவும் ஸ்டைலிஸ் ஆக இருக்கும்” எனவும் விராட் கோலியை பற்றி
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…