நேற்றைய போட்டியில் மைதானத்திற்கு வெளியே இருந்த பந்துவீச்சாளர் ஜேமிசன் அருகில் உள்ள பெண்ணை பார்த்து புன்னகை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியும் மோதியது. இப்போட்டியில் முதலில் இறங்கிய பெங்களூர் அணி 93 ரன்கள் எடுக்க பின்னர், களமிறங்கிய கொல்கத்தா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர் ஜேமிசனின் செயல் குறித்து சமூகவலைதளங்களில் மீம்ஸ் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மைதானத்திற்கு வெளியே அமர்ந்திருக்கும் பந்துவீச்சாளர் ஜேமிசன் அருகில் உள்ள பெண்ணை பார்த்து புன்னகை செய்து கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில், ஆர்சிபியின் ஸ்கோர் 54 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளாக இருந்தது. இந்த புகைப்படத்தில், ஜேமிசனைத் தவிர ஆர்சிபி அணியின் அனைத்து வீரர்களின் கவனமும் களத்தில் உள்ளது. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரும் இந்த புகைப்படத்தில் உள்ளார்.
இந்த புகைப்படத்தில் கேப்டன் விராட் கோலியின் முகம் போட்டியைப் பற்றிய கவலையை தெளிவாகக் காட்டுகிறது. இந்த போட்டியில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜேமிசன் 4 ரன்கள் எடுத்த பிறகு ரன் அவுட் ஆனார். இந்திய அணியின் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோல்வியடைய முக்கிய பங்கு வகித்தார்.
வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்திக்கு முதல் முறையாக டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வருண் சக்கரவர்த்தி டி 20 உலகக்கோப்பையில் எதிர் அணிகளுக்கு மிரட்டுவார் என கூறப்படுகிறது. இதுவரை டி20 சர்வதேச போட்டிகளில், வருண் சக்கரவர்த்தி 3 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் அவர் 22 ஐபிஎல் போட்டிகளில் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…