மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 56-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டோஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – ரஹானே களமிறங்கினார்கள். இவர்களின் கூட்டணி, கொல்கத்தா அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுத்தது.
இதில் 43 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் ஐயர் தனது விக்கெட்டை இழக்க, நிதிஷ் ராணா களமிறங்கினார். அவரும் அதிரடியாக ஆட, மறுமுனையில் இருந்த ரஹானே 25 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் எடுத்தும் ரசல் 9 ரன்கள் எடுத்தும் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் ரிங்கு சிங் களமிறங்கி 23 ரன்கள் எடுத்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
இறுதியாக கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. இதில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா, 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…