SAvsNED [file image]
டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 16-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணி, நெதர்லாந்த் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
இன்று நடைபெற்ற டி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், நெதர்லாந்து அணியும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நெதர்லாந்து அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. தென்னாபிரிக்கா பவுலர்கள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தட்டு தடுமாறிய ரன்களை சேர்த்தது. இதன் மூலம் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் நெதர்லாந்து அணியின் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மட்டும் பொறுப்புடன் ரன்களை சேர்த்தார். அவர் நிதானமாக நின்று 45 பந்துக்கு 40 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளை கழிப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் பிறகு தென்னாபிரிக்கா அணி எளிய இலக்கான 104 ரன்களை எடுக்க பேட்டிங் செய்ய களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆனால், வழக்கம் போல இந்த மைதானத்தில் 2-வதாக பேட்டிங் செய்யும் அணி சொதப்புவது போல தென்னாபிரிக்கா அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் தட்டி தட்டி ரன்களை சேர்த்தும், தேவையான நேரங்களில் பவுண்டரிகள் அடித்தும் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தனர்.
அதன் பிறகு ஸ்டப்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு நின்று நிதானமாக மில்லர் போட்டியை வெற்றிகரமாக அரை சதம் (51 பந்துக்கு 59* ரன்கள்) கடந்து ஆட்டமிழக்காமல் முடித்து வைத்தார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்து தென்னாபிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றதோடு இந்த தொடரின் 2-வது வெற்றியையும் பெற்றது.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…