ArjunTendulkar Dog Bite [Image-BCCI/Sportzpics]
மும்பை இந்தியன்ஸ் வீரர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் வளர்ந்துவரும் இளம் வீரர்களில் ஒருவரும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொல்கத்தா அணிக்கு எதிராக களமிறங்கினார்.
முதல் போட்டியில் விக்கெட் எடுக்காவிட்டாலும், அடுத்த போட்டியில் ஹைதராபாத்துக்கு எதிராக தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இருந்தும் தனது பவுலிங் திறமையை இந்த ஐபிஎல் மூலம் உலகிற்கு அவர் நிரூபித்துள்ளார். யார்க்கர் மற்றும் ஸ்விங் செய்து அருமையாக பவுலிங் செய்து வரும் அர்ஜுன், ஓடிவரும் ரன்அப்பை மாற்றுமாறு பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.
மும்பை அணிக்காக சில போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மும்பை அணி லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்காக பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டுள்ள போது, அர்ஜுன், லக்னோ அணிவீரர் யுத்வீர் சிங் மற்றும் மோசின் கான் இருவரையும் சந்தித்த போது பரஸ்பரம் பேசிக்கொண்டனர். அப்போது அவர்களிடம் பேசிய அர்ஜுன் தன்னை நாய் கடித்து விட்டதாகக் கூறியுள்ளார். இந்த வீடீயோவை லக்னோ அணி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…