ஐபிஎல் 2024: டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி..!

Published by
murugan

ஐபிஎல் 2024: டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணி மோதியது. இந்தபோட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.  டாஸ் வென்ற டெல்லி  பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 234 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியில் அக்சர் படேல், அன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டையும்,  கலீல் அகமது 1 விக்கெட்டையும் பறித்தனர்.

மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 49 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் , ஹர்திக் பாண்டியா 39 ரன்களும் எடுத்தனர். அதேநேரத்தில்  மத்தியில் இறங்கிய டிம் டேவிட் 45* ரன்களும், ரொமாரியோ  10 பந்தில் 39* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

235 ரன்களுடன் டெல்லி அணி தொடக்க டேவிட் வார்னர், பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். 4-வது ஓவரில் டேவிட் வர்னர் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதை அடுத்து அபிஷேக் போரல் களமிறங்கினார். மறுபுறம்  சிறப்பாக விளையாடி வந்த  பிருத்வி ஷா அரைச்சதம்விளாசினார்.

இருப்பினும் 12-வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் போல்டாகி 66 ரன்னில்  பெவிலியன் திரும்பினார். பின்னர்  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்க வந்த வேகத்தில் 11 பந்தில் 26 ரன்கள் எடுக்க எதிர்முனையில் விளையாடி வந்த அபிஷேக் போரல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பந்த்  3-வது பந்திலே 1 ரன் எடுத்து வெளியேறினார்.

களத்தில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்தில் அரைசதம் விளாசி 71* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.  இறுதியாக டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தனர். இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணியில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டையும் , ரொமாரியோ ஷெப்பர்ட்  1 விக்கெட்டையும் பறித்தனர். மும்பை அணி 4 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணி 5 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

5 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago