Shakib Al Hasan [file image]
ஷகிப் அல் ஹசன்: நடைபெற்றது உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ள வீரரான ஷாகிப் அல் ஹசன், இந்தியா முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்கின் கருத்தை குறித்து பேசி இருக்கிறார்.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வங்கதேச அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணி விளையாடிய இந்த 3 போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த ஒரு ஸ்கோரையும் பதிவு செய்யவில்லை. இதனை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்,”ஷாகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர் வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவரது செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும்”, என இது போல விமர்சித்து பேசி இருந்தார்.
இதனை குறித்தது தென்னாபிரிக்கா அணியுடனான போட்டி முடிந்த பிறகு ஷாகிப் அல் ஹசனிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். பத்திரிகையளர்கள், வீரேந்தர் சேவாக் இது போன்று கூறி இருக்கிறாரே இதற்கு உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது, அவர் சேவாக் யார்? என சேவாக்கை தெரியாதது போல மீண்டும் ஒரு முறை கேட்பார்.
அதன் பின் பேசிய அவர், “இங்கு எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அணியின் வெற்றிக்கு உதவுவது தான் ஒரு வீரரின் பணியாகும். பேட்ஸ்மேனாக, ஒரு பவுலராக, ஒரு ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை.
அதே போல், ஒரு வீரரால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என நான் நினைக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒரு நாள் உங்களுக்கான நாளாக அமையும், மற்றொரு நாள் வேறொருவர் நாளாக அமையும். எனது அணிக்காக விளையாடுவதே எனது பணி, அதை நான் தொடர்ந்து செய்வேன்”, என்று கூறி இருந்தார்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…