இன்றைய 38-வது போட்டியில் பஞ்சாப் Vs டெல்லி அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே பிருத்வி ஷா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் இருவரும் தலா 14 ரன் எடுத்து வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் சதம் விளாசி, 106* ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன் இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால், ராகுல் இருவரும் இறங்கினர்.
ராகுல் 15 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடி 29 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து, மாயங்க் அகர்வால் 5 ரன் எடுத்து வெளியேற அணி மோசமான நிலையில் இருந்தபோது ,மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
சிறப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் அரைசதம் விளாசி 53 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். பஞ்சாப் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…