மும்பையை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்..!

Published by
murugan

பஞ்சாப் அணி 17.4 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி தொடக்கமே சிறப்பாக அமையவில்லை இதனால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தனர். மும்பை அணியில்  அதிகபட்சமாக ரோகித் சர்மா 63, சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தனர். 132 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 4 பவுண்டரி , 1 சிக்ஸர் விளாசி 25  ரன்னில் வெளியேறினார். இவர்கள் கூட்டணியில் 53 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்து இறங்கிய கிறிஸ் கெய்ல்,  கே.எல்.ராகுல் உடன் சேர்ந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

இறுதியாக பஞ்சாப் அணி 17.4 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசி கடைசிவரை களத்தில் 60* , கிறிஸ் கெய்ல் 43* ரன்களுடன் நின்றனர்.

பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டியில் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டியில் தோல்வியும் ,2 போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

39 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

55 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

4 hours ago