39 பந்துகளுக்கு 73 ரன்கள் அடித்து மிரட்டிய ராகுல் தெவாட்டியா.. குவியும் பாராட்டுக்கள்!

Published by
Surya

ஹரியானா – சண்டிகர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராகுல் தெவாட்டியா, 39 பந்துகளில் 73 ரன்களை அடித்து விளாசினார்.

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களை மத்தியில் இடம்பிடித்தவர், ஹரியானா நாட்டை சேர்ந்த ராகுல் தெவாட்டியா. 27 வயதாகும் இவர், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் விளையாடி, 255 ரன்கள் எடுத்துள்ளார். தற்பொழுது ராகுல் தெவாட்டியா, ஹரியானா அணி சார்பாக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், டெஸ்ட் தொடருக்கு பின் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர், மார்ச் 12 ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான 19 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ராகுல் தெவாட்டியாவும் இடம்பெற்றுள்ளார். மேலும், இந்திய அணிக்காக இவர் முதல் முதலாக தேர்வாகியுள்ளார். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஹரியானா – சண்டிகர் அணிகளுக்கு இடையிலான போட்டி, கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் தெவாட்டியா, 39 பந்துகளில் 73 ரன்களை அடித்து விளாசினார். இதில் 4 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். தெவாட்டியாவின் இந்த ஆட்டத்தை வரும் 24 ஆம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Published by
Surya

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

7 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

8 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

10 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

10 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

11 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

11 hours ago