Shivam Dube csk [file image]
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருவதால் வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 350 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிக்ஸர் அடிப்பது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாணியில் இருப்பதாக அவருடன் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஒப்பபிட்டு பேசி வருகிறார்கள்.
இப்படி ஒப்பிட்டு பேசுவது ரொம்பவே முட்டாள் தனமான விஷயம் என சிவம் துபே சற்று கடுப்பாகி பேசியுள்ளார். பிசிசிஐக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய சிவம் துபே “யுவராஜ் சிங் உடன் என்னை ஒப்பிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. எனக்கு என்று தனியாக ஒரு சொந்த பாணி இருக்கிறது. நான் அந்த பாணியில் தான் விளையாடி கொண்டு இருக்கிறேன்.
அவருக்கும் தனி பாணி இருக்கிறது. எனவே அவருடைய பாணியும் என்னுடைய பாணியும் சில இடங்களில் ஒற்றுமைகள் இருக்கலாம். நான் முழுக்க முழுக்க இப்போது என்னுடைய விளையாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறேன். நான் அதிரடியாக விளையாடுவதா இல்லையா என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. அணிக்கு எப்படி விளையாடினாள் பயனாக இருக்குமோ அந்த வகையில் நான் எவ்வாறு செயல்பட முடியும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன்.
அணியில் கேப்டன் நம்மளை நம்பினால் போதும் நாம் கண்டிப்பாக அருமையாக விளையாடுவோம். வாய்ப்புகள் கிடைத்தது என்றாலும் அந்த வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்” எனவும் சிவம் துபே தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிரடியான பார்மில் இருக்கும் சிவம் துபே டி20 உலகக்கோப்பையில் எப்படி விளையாடப்போகிறார் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…