SLvIND , 1st ODI [file image]
SLvsIND : சமீபத்தில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான சுற்று பயணத்தொடர் தொடங்கப்பட்டது. அதில் முதலில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற்றது. அந்த தொடரில் 3 போட்டிகளையும் அபாரமாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றது.
இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது இன்றைய நாளில் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதை பிசிசிஐ தங்களது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர்.
மேலும், அவருடன் விராட் கோலி, ரிஷப் பண்ட், இந்திய அணியில் இணைவார்கள் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் தொடங்கவுள்ளது.
மேற்கொண்டு நடைபெற உள்ள 2 ஒருநாள் தொடரும் அதே மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தனது பயிற்சியின் கீழ் இந்திய அணியை முதல் டி20 தொடரை வெற்றி பெற செய்துள்ளார்.
தற்போது அவர் எப்படி ஒருநாள் தொடரை கை ஆழ போகிறார் என்பது ரசிகர்களின் அடுத்த எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. இலங்கையில், முன்னாள் வீரரான ஜெயசூர்யா தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால், இலங்கை அணியிலும் பல மாற்றங்கள் நடைபெறலாம்.
மேலும், இலங்கை அணி மற்றும் இந்திய அணிகளை ஒப்பிட்டு பார்க்கையில் இந்திய அணி சற்று வலு நிறைந்த அணியாக உள்ளதால் இந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…