srilanka cricket team
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது .டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.மழை பெய்ததன் காரணமாக போட்டியானது 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு பின்பு 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமான் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க மற்றொரு புறம் அப்துல்லா ஷபீக் நிதானமாக விளையாடி 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .கேப்டன் பாபர் அசாம் தனது பங்கிற்கு 29 ரன்கள் எடுத்து வெளியேற ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 86 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன் பின் சிறப்பாக விளையாடிய இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார் .பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்களை எடுத்தது.
253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஸ்ஸங்க(29), குசல் பெரேரா(17) ஆகியோர் ஆட்டமிழக்க குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 91 ரன்களை எடுத்தார்.சதீர சமரவிக்ரம(48), சரித் அசலங்கா49 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது இதில் இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி.
இன்று இந்திய அணி வங்கதேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் எதிர்கொள்கிறது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…